Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 18, 2020, 04:05:29 PM

Title: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: shark on November 18, 2020, 04:05:29 PM
தினமும் புதிய புதிய நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் வந்துகொண்டே உள்ளது இவை அனைத்தும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்குமா
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: stars on December 16, 2020, 08:53:35 AM
உண்மையில் அனைத்து புதிய நாணயங்களும் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்காது. பெரும்பாலான திட்டங்கள் ஏமாற்றும் திட்டங்களாகவே உள்ளன. மிக ஒரு சில திட்டங்கள் மட்டுமே நம்பகமானதாக உள்ளது.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: shark on December 16, 2020, 12:42:18 PM
புதிய சக்திவாய்ந்த நாணயங்கள் அதிகமாக கிரிப்டோ மார்க்கெடில் உள்ளன சரியானவற்றை கண்டறிந்து முதலீடு செய்யலாம்.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: rapheal on December 18, 2020, 02:54:18 PM
கிரிப்டோ சந்தையில் ஏராளமான புதிய நாணயங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலான நாணயங்கள் மோசடி நாணயங்கள் ஆகும். எனவே நீங்கள் Binance போன்ற நம்பகமான பரிமாற்ற தளங்களில் இருந்து வாங்குவது நல்லது.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: BullRuN on December 18, 2020, 04:40:00 PM
அனைத்து நாணயங்களும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்காது ஏனெனில் ஒரு ERC 20 டோக்கனை எளிமையாக உருவாக்க முடியும் எனவே அதிகமான போலி திட்டம் உள்ளன எனவே முதலீடு செய்வதற்கு முன் அதிகமான கவனம் தேவை.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: shark on December 19, 2020, 04:47:29 AM
அதிகமான புதிய நாணயங்கள் தினந்தோறும் கிரிப்டோ மார்க்கெடில் வருகிறது ஆனால் அனைத்தும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்காது எனினும் பல புதிய நம்பகமான முதலீட்டு திட்டங்களும் வந்து கொண்டே இருக்கிறது.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: abc123 on December 19, 2020, 07:44:06 AM
ஆமாம் புதிய நாணயங்கள் மற்றும் டோக்கன்கள் வர்த்தகத்திற்காக தினமும்‌ வந்து கொண்டிருக்கின்றன. இதில் அதிகமான நாணயங்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்படுகின்றன. மேலும் சில நாணயங்கள் softcapஐ எட்டுவது கிடையாது. எனவே நீங்கள் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: Stgeorge on December 30, 2020, 02:58:59 PM
தினமும் புதிய புதிய நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் வந்துகொண்டே உள்ளது இவை அனைத்தும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்குமா
சந்தையில் வரும் அனைத்து புதிய நாணயங்களும் ஏற்றதாக இருக்காது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அந்த திட்டம் அதிக ஆற்றல் வளமிக்கதா, சிறந்த பரிமாற்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதா மற்றும் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா  போன்றவற்றை முதலில் ஆராய வேண்டும்.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: abc123 on December 31, 2020, 11:07:04 AM
பைனான்ஸ் போன்ற முதன்மையான பரிமாற்ற தளங்களில் அவ்வப்போது பல நாணயங்கள் பட்டியலிடப்படுகிறது . நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நாணயங்களில் முதலீடு செய்ய நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஏனெனில் இந்த பரிமாற்ற தளங்கள் மிகவும் நம்பகமான மற்றும் அதிக வர்த்தக அளவை கொண்டவை. மேலும் இங்கு பட்டியலிடப்படுகின்ற நாணயங்களும் நம்பகமானவை மற்றும் நல்ல எதிர்காலத்தை கொண்டவை.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: mnopq on January 07, 2021, 07:23:42 AM
எல்லா புதிய நாணயங்களும் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்காது. ஒரு சில புதிய நாணயங்கள் மட்டுமே ஏற்றதாக இருக்கும். இப்போது polkadot சார்ந்த பல புதிய நாணயங்கள் சந்தையில் உள்ளன. இந்த நாணயங்களில் நீங்கள் வர்த்தகம் செய்யலாம். ஆனால் முதலில் முதலீடு செய்யும் நாணயங்களை பற்றி சுய ஆய்வு செய்யுவது மிகவும் முக்கியமானது.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: whitenem on April 17, 2021, 07:36:31 PM
Coin market capல் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம். மேலும் புதிய நாணயங்களில் முதலீடு செய்ய விரும்பினால் polkadot, polkastarter, chainlink maker dao, poolz போன்ற தளங்களில் வரும் IDOகளில் பங்கெடுங்கள். இவை நம்பகமானதாக இருக்கும்.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: abc123 on August 28, 2021, 10:05:50 AM
Coin market capல் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம். மேலும் புதிய நாணயங்களில் முதலீடு செய்ய விரும்பினால் polkadot, polkastarter, chainlink maker dao, poolz போன்ற தளங்களில் வரும் IDOகளில் பங்கெடுங்கள். இவை நம்பகமானதாக இருக்கும்.
இந்த ஆண்டு இந்த தளங்களில் வெளிவந்த நாணயங்களின் விலைகள் இப்போது குறைந்து காணப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நாணயங்களில் முயற்சி செய்யலாம். கிரப்டோ சந்தை நன்றாக இருந்தால் இந்த நாணயங்கள் உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: micjoh on November 18, 2021, 12:07:34 PM
பைனான்ஸ், குகாயின் போன்ற பெரிய பரிவர்த்தனை தளங்களில் பல புதிய நாணயங்கள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் இவை பட்டியலிடப்படும்போது பல மடங்கு இவற்றின் விலை உயர்கிறது. அதனால் பொறுமையாக காத்திருந்து விலை குறையும் போது இவற்றில் முதலீடு செய்யலாம். மேலும் குறிப்பாக என்னை பொறுத்தவரை இவற்றில் முதலீடு செய்வதை விட இத்தேரியம் போல்காடாட் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: புதிய நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்குமா
Post by: whitenem on March 18, 2022, 04:42:38 AM
தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த தொழில்நுட்பத்தை சார்ந்த புதிய நாணயங்கள் பம்ப் ஆகிறது என கவனித்து முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் IEO and IDO நடக்கும் போது வாங்கினால் மட்டுமே தான் அதிக லாபம் கிடைக்கும். மேலும் இந்த நாணயங்கள் லிஸ்ட் செய்த பிறகு பல மடங்கு விலை உயரும். அப்போது முதலீடு செய்தால் மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.