Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 22, 2020, 11:58:28 AM
-
நண்பர்களே Blockchain தொழில்நுட்பத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
பிளாக்செயின் ஆனது ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும்.இது வலிமையானது மேலும் hack செய்யமுடியாது மற்றும் பாதுகாப்பானது. இது உலகின் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது என நான் நினைக்கிறேன்.
-
பிளாக்செயின் ஒரு சிறந்த தொழில்நுட்பம் ஆகும். இது மிகவும் பாதுகாப்பானது என்பதால் உலகில் கணினி சார்ந்த துறைகளில் இது மிகவும் தேவையான ஒன்று என நான் நினைக்கிறேன். இந்த தொழில்நுட்பத்தில் தான் கிரிப்டோகரன்சிகளும் இயங்குகிறன.
-
பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் பிட்காயின் உட்பட அனைத்து altcoins இயங்குகின்றன. இது உலகின் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வேகமான மற்றும் பாதுகாப்பான பண பரிவர்த்தனை முதல் அதிகமான செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் என்பதால் பல நாடுகள் இதன் மீது ஆர்வமாக உள்ளன. இது விரைவில் பல நாடுகளில் உள்கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படும் என நான் நினைக்கிறேன்.
-
நண்பர்களே Blockchain தொழில்நுட்பத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பிளாக்செயின் தொழில்நுட்பம் புதிய தொழில்நுட்பம் ஆகும். பிட்காயின் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் இயங்குகிறது. உலகில் பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமாக உள்ளன மற்றும் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளன. மேலும் பிட்காயின் இந்த தொழில்நுட்பத்தில் இயங்குவதால் பிட்காயின் மிகவும் பாதுகாப்பானதாகவும் மற்றும் நம்பகமானதாகவும் உள்ளது. எனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
பிளாக்செயின் தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. ஏனென்றால் இது மிகவும் நம்பகமானதாகவும் மற்றும் பயனாளர்களைத் தவிர வேறு யாரும் ஊடுருவமுடியாத அளவிற்கு இருப்பதாலும் இதை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பல நாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது.
-
ஒரு காலத்தில் பிளாக் செயின் தொழில்நுட்பம் மற்றும் அதை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பிட்காயினையும் வேண்டாம் என்று உலகில் பல நாடுகள் வெறுத்து ஒதுக்கின. இதற்கு பல தடைகளையும் விதித்தன. ஆனால் இன்று பிளாக்செயினின் முக்கியத்துவம் மற்றும் நம்பகத்தன்மையை உணர்ந்த பிறகு வெறுத்து ஒதுக்கியவர்கள் எல்லோரும் பிளாக்செயினையும் மற்றும் பிட்காயினையும் ஏற்றுக்கொண்டுவருகின்றன.