Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:54:34 AM

Title: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: stars on December 06, 2020, 08:54:34 AM
 Blockchain தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது நமக்கு பயனுள்ளதா?
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: shark on December 13, 2020, 03:48:03 PM
பிளாக் செயின் ஒரு சிறந்த தொழில்நுட்பம் அதாவது இது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் உலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது.
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: Stgeorge on December 30, 2020, 02:41:03 PM
பிளாக் செயின் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளது என நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் எல்லா துறைகளிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். ஏனெனில் இது பாதுகாப்பானது.
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: abc123 on January 03, 2021, 05:13:41 PM
பிளாக் செயின் ஒரு புதிய தொழில்நுட்பம் ‌ஆகும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஏராளமான கிரிப்டோ கரன்சி திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த தொழில்நுட்பத்தை பல நாடுகள் ஏற்று கொண்டுள்ளன மற்றும் சில உள் கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த அனுமதியும் அளித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும்.
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: mnopq on January 04, 2021, 03:33:14 PM
பிளாக் செயின் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்திற்குள் திருடர்கள் எவரும் நுழைய முடியாது என நான் கேள்விப்பட்டுள்ளேன். இது எதிர்காலத்தில் வங்கித் துறை போன்ற பல இடங்களில் பயன்படுத்தப்படலாம்.
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: rapheal on June 24, 2021, 01:03:51 PM
Blockchain தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள ஒன்று. இதில் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பிட்காயின், இத்தேரியம் பிளாக்செயின், கர்டானோ பிளாக்செயின் , போல்காடாட் பிளாக் செயின் போன்று பல வகையான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. இது இந்த உலகத்திற்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக நான் நினைக்கிறேன்.
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: micjoh on June 29, 2021, 04:29:48 PM
எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் தான் எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்படும் என நான் நினைக்கிறேன் ஏனெனில் இது மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் என பலர் கூறுகின்றனர். இப்போது பல நாடுகளில் கிரிப்டோ கரன்சிகளை தங்கள் நாடுகளில் பயன்படுத்த அனுமதித்துள்ளன. இது கிரிப்டோ கரன்சிகளை மட்டுமல்லாது பிளாக்செயின் தொழில்நுட்பத்தையும் வரவேற்பதாக நான் பார்க்கிறேன்.
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: whitenem on July 09, 2021, 01:42:20 PM
பிளாக்செயின் மிகவும் பயனுள்ளது மற்றும் மிகவும் பாதுகாப்பான ‌தொழில்நுட்பம். இப்போது வங்கித் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது(அதாவது XRPயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது). இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிளாக் செயின் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: micjoh on March 24, 2022, 11:53:02 AM
பிளாக்செயின் மிகவும் பயனுள்ளது மற்றும் மிகவும் பாதுகாப்பான ‌தொழில்நுட்பம். இப்போது வங்கித் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது(அதாவது XRPயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது). இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும் என நான் நம்புகிறேன்.
பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமெரிக்கா இந்தியா சீனா ரஷ்யா  போன்ற நாடுகள் இப்போது ஆர்வமாக உள்ளன. ஒரு காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை வேண்டாம் என்று உதறி தள்ளினர். ஆனால் இதன் பயன்பாடு காரணமாக இப்போது ஏற்றுக்கொண்டு வருகின்றன. இதனால் கிரிப்டோ நாணயங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கலாம்.