Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 10, 2020, 07:27:46 AM
-
பிட்காயின் சமீபத்தில் $20000ஐ எட்டியது. அதன் பிறகு கிரிப்டோ சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இது மீண்டும் பிட்காயின் $20kஐ எட்டுமா?
-
பிட்காயின் இந்த சரிவிலிருந்து மீண்டு இப்போது $25000ஐ எட்டியுள்ளது. இப்போது பிட்காயின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது. இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
-
தற்போது பிட்காயின் விலை $33500 ஆக உள்ளது. இதன் விலை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் $43,000ஐ எட்டியது. அதன் பிறகு இதன் விலை குறைய தொடங்கியது. மேலும் இதனுடன் altcoinsகளின் விலையும் குறைய தொடங்கியது. ஆனால் இப்போது இத்தேரியம் விலிமை மிக்கதாக உள்ளது. மேலும் பிட்காயினின் விலை இன்னும் குறையலாம் என பலர் கூறுகின்றனர்.
-
தற்போது சந்தை கீழே செல்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு பிட்காயின் ஏற்கனவே $42k தொட்டது விட்டது ஆனால் தற்போது அது $35k இல் உள்ளது இந்த ஆண்டு பிட்காயின் $20k செல்வது மிகக்கடினம்.
-
இன்று பிட்காயின் $59,000 வரை சென்று விட்டு , தற்போது 57,000$ ஆக குறைந்துள்ளது. மேலும் $55,000 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன். மேலும் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வதற்கு இது ஒரு ஏற்ற நேரமாக உள்ளது.
-
பிட்காயின் மிகவும் வலுவான நிலையில் உள்ளது தற்போது இது $100k நோக்கி தனது அடுத்த இலக்கை தொடங்கி உள்ளது தற்போது பிட்காயின் விலை $59k அளவில் உள்ளது மேலும் இதனுடைய அதிகபட்ச விலையை தாண்டினால் இந்த நாணயம் மிக எளிதாக $100k தொட்டுவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஆனால் $100k இதனுடைய கடைசி எல்லையாக இருக்காது.
-
பிட்காயின் $64000ஐ எட்டிய பிறகு அதன் விலை வீழ்ச்சியடைந்து வருவதை காணலாம். தற்போது இது $42000ஆக குறைந்துள்ளது. இது கிரிப்டோவில் வர்த்தகம் செய்பவர்களுக்கு பெரிய வருத்ததை கொடுத்துள்ளது. மேலும் இந்த நேரம் பிட்காயின்ஐ வாங்குவதற்கு சிறந்த நேரம் என் பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர் மற்றும் பிட்காயினின் விலை படிப்படியாக உயரலாம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
கிரிப்டோ சந்தையில் பிட்காயினின் விலை கீழே செல்கிறது. அதை பின்தொடர்ந்து அல்ட்காயின்ஸ்களும் செல்கிறது. உங்களிடம் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ் இருந்தால், பயந்து விற்றுவிடாதீர்கள். இது correctionஆக இருக்கலாம். இது மீண்டும் மீட்சியடைய கூடும். கிரிப்டோ அல்லது பிட்காயின் தொடர்பாக எந்த மோசமான செய்திகளும் வராதவரை நீங்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை.
-
கிரிப்டோ சந்தை சில தினங்களாக சிவப்பாக உள்ளது. பிட்காயின் இரண்டு நாட்களுக்கு முன்பு $48,000 வரை உயர்ந்துவிட்டு தற்போது $44,000ஆக கீழே உள்ளது. இது மீண்டும் மீட்சியடையும் என பலர் கூறுகின்றனர். என்னயிருந்தாலும் நீங்கள் உங்கள் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை hold செய்வது நல்லது. விற்க வேண்டாம்.
-
பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலைகள் இப்போது கீழே சென்று கொண்டிருக்கிறது. பிட்காயின் மீண்டும் ATH ஐ எட்டும் என நான் நினைக்கிறேன். எனவே உங்களிடம் கிரிப்டோ கரன்சிகள் இருந்தால் hold செய்வது மிகவும் நல்லது. மேலும் இந்த dipல் கிரிப்டோ நாணயங்களை வாங்கி hold செய்யுங்கள்.
-
பிட்காயின் சமீபத்தில் $20000ஐ எட்டியது. அதன் பிறகு கிரிப்டோ சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இது மீண்டும் பிட்காயின் $20kஐ எட்டுமா?
இதன் பிறகு பிட்காயின் $69,000ஐ எட்டியது. இது பிட்காயினின் புதிய ATHஆக இருக்கிறது. அதன் பிறகு பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. இதனால் அல்ட்காயின்ஸ்களும் மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பிட்காயின் இன்னும் $20,000 வரை கீழே செல்லலாம் என மக்கள் பீதியில் உள்ளனர்.