Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 13, 2020, 06:18:13 AM
-
இந்த நாணயங்களுள் எவை இப்போது முதலீடு செய்ய ஏற்றது?
-
என் கருத்து என்னவென்றால் இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்ய வேண்டாம். தற்போது பிட்காயின் டைமண்ட் ன் வளர்ச்சி மற்றும் ஆற்றல் வளம் குறைவாக உள்ளது. அடுத்து பிட்காயினின் விலை மிக அதிகமாக அதிகரித்து விட்டது. இது அபாயகரமானது. எனவே நீங்கள் வேறு நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இப்போது இத்தேரியம் முதலீடு செய்ய ஒரு சிறந்த தேர்வு ஆகும்.
-
பிட்காயின் நம்பகமான நாணயம் தற்போது இந்த நாணயத்தை நீண்டகால முதலீட்டுக்கு அல்லது குறுகிய கால முதலீட்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் இரண்டுக்குமே இந்த நாணயம் சிறந்தது.
-
இப்போது பிட்காயின் டைமண்ட் ல் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இதன் விலை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் மிக குறைவாக உள்ளது. இது ஒரு சிறந்த நாணயமாக உள்ளதால் இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும். மேலும் இப்போது பிட்காயினில் தின வர்த்தகம் செய்வது மிகவும் நல்லது.
-
இரண்டுமே முதலீடு செய்ய ஏற்றது.இப்போது பிட்காயினில் குறுகிய கால முதலீடு செய்யுங்கள். பிட்காயின் டைமண்ட்ல் நீண்டகால முதலீடு செய்யுங்கள்.
-
நீங்கள் இப்போது இத்தேரியமில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு சிறந்த முதலீடாகவும் மற்றும் லாபகரமாகவும் இருக்கும். இந்த ஆண்டு இது உங்களுக்கு நல்ல லாபத்தை தரலாம் என நான் நம்புகிறேன்.
-
பிட்காயின் டைமண்ட் முதலீடு செய்ய ஏற்றதல்ல. முதலீடு செய்ய நினைத்தால் பிட்காயினில் செய்யலாம். பிட்காயின் டைமண்ட் பிட்காயினின் போர்க் நாணயங்களில் ஒன்று. இந்த நாணயம் எந்த வித வளர்ச்சியும் இன்றி காணப்படுகிறது.
-
பிட்காயின் டைமன்ட் ஆனது பிட்காயினின் போர்க் நாணயம் ஆகும். இந்த நாணயத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. பிட்காயினில் தாராளமாக முதலீடு செய்யலாம். இதை தாராளமாக பல வருடங்களுக்கு hold செய்யலாம். பல மடங்கு லாபத்தையும் பெறலாம். பிட்காயினின் price chartஐ பார்த்தால் இது உங்களுக்கு புரியும்.
-
பிட்காயின் முதலீடு செய்ய ஏற்றது. இப்போது பல நாடுகளில் பிட்காயின் ஏற்றுக்கொள்ள பட்டு வருகிறது என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும். மேலும் அதிகமான இடங்களில் பணத்திற்கு பதிலாக பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ் பயன்படுத்தப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் பிட்காயினின் விலை வளர்ச்சி அதிகமாக இருக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே மற்ற நாணயத்தை விடுத்து பிட்காயினில் முதலீடு செய்வது நல்லது.
-
பிட்காயினை ஒரு டிஜிட்டல் தங்கம் எனவும் எதிர்கால நாணயம் எனவும் மக்கள் கூறுகின்றனர். இது உண்மை ஆவது போல் தோன்றுகிறது. ஏனெனில் உலகில் பல பெரிய நாடுகள் பிட்காயினை ஏற்று கொண்டு வருகின்றன. எனவே இதன் வளர்ச்சியும் தங்கத்தைப் போல் இருக்கும் என பலர் கூறுகிறார்கள். எனவே தாராளமாக பிட்காயினில் முதலீடு செய்யுங்கள்.
-
இப்போது இந்த நாணயங்களுள் பிட்காயினில் முதலீடு செய்யலாம். கிரிப்டோ சந்தை பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் மீண்டும் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என பெரும்பாலான மக்கள் கூறுவதாலும் இப்போது hold செய்வது நல்லது.ஆனால் பிட்காயின் டைமண்ட் நாணயத்தில் இப்போது முதலீடு செய்ய வேண்டாம். இது ஒரு தரமான நாணயமாக இப்போது இல்லை.