Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 18, 2020, 11:17:45 AM

Title: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: mnopq on December 18, 2020, 11:17:45 AM
 இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் விலை எதுவரை செல்லும். உங்களுடைய கணிப்பு என்ன?
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: Stgeorge on December 31, 2020, 05:27:10 AM
இந்த ஆண்டு முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. இன்று பிட்காயினின் விலை $30000 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன்.மேலும் இந்த ஆண்டு பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: abc123 on January 03, 2021, 05:18:02 PM
தற்போது பிட்காயினின் விலை $34,000ஐ கடந்து விட்டது. மேலும் இப்போது பிட்காயின் சந்தை வலுவாக உள்ளதால் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு பிட்காயின் $50000 அல்லது அதற்கு மேலும் செல்லலாம் என நான் நினைக்கிறேன். இப்போது உங்களிடம் பிட்காயின் இருந்தால் அதை hold செய்யுங்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபத்தை தரலாம்.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: rapheal on March 06, 2021, 05:09:46 PM
இந்த ஆண்டு பிட்காயின் விலை $100000க்கு மேல் செல்லலாம் என பல கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர். நானும் இது நடக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏன் என்றால் அப்போது தான் அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்கும். இதனால் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் லாபம் பெற முடியும்.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: BullRuN on March 08, 2021, 05:01:21 PM
பிட்காயினைப் பற்றிய செய்திகள் மற்றும் கிரிப்டோ நிபுணர்களின் கணிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது இதன் விலை $80000 முதல் $100000 வரை செல்லும் என நான் நினைக்கிறேன். இது வெறும் கணிப்பு தான். உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: rapheal on April 04, 2021, 07:14:13 PM
இந்த ஆண்டு பிட்காயின் விலை எவ்வளவு செல்லும் என என்னால் தோராயமாக செல்லமுடியவில்லை. அதாவது பல கிரிப்டோ நிபுணர்கள் இதன் விலை $100,000, $200,000 வரை செல்லும் என கூறுகிறார்கள். ஆனால் இன்னொரு புறம் pi cycle போன்ற பல indicators பிட்காயின் cycle முடிய போகிறது என்று காட்டுகிறது. இதில் எது உண்மை என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: micjoh on February 20, 2022, 11:50:59 AM
பல கிரிப்டோ மக்கள் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது மற்றும் பிட்காயின் சைக்கிள் முடிந்தது என கூறுகிறார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். தற்போது இதன் விலை $38,000ஆக உள்ளது. இந்த ஆண்டு இதன் விலை $25,000 வரை கீழே செல்லலாம் என நான் நினைக்கிறேன். இன்பிளேசன் அதிகரித்து இருப்பது கிரிப்டோ மற்றும் ஸ்டாக் மார்க்கெட்க்கு அபாயகரமானதாக பார்க்கப்படுகிறது.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின்
Post by: Stgeorge on April 07, 2022, 06:34:48 PM
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து சென்ற மாதம் வரை பிட்காயின் பியர் மார்க்கெட்இல் இருந்தது. இப்போது இரண்டு வாரங்களாக இதன் விலை மெதுவாக அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலை இப்படியே நீடித்து புல் மார்க்கெட்டாக இருந்தால் பிட்காயின் மீண்டும் இந்த ஆண்டு  ஆல் டைம் ஹையை எட்டலாம். அல்லது பியர் மார்க்கெட்ஆக இருந்தால் $25,000 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன்.