Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 12:37:27 PM

Title: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: mnopq on December 20, 2020, 12:37:27 PM
இங்கிலாந்து நாட்டில் புது வகையான ஒரு கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளதாகவும் இது covid19ஐ விட அதிவேகமானது எனவும் தொலைக்காட்சியில் செய்திகள் வந்து வண்ணம் உள்ளன. இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: BullRuN on December 20, 2020, 01:24:52 PM
தற்போது இவ்வாறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன இதனால் கிரிப்டோவில் மாற்றம் ஏற்படலாம் என்றாலும் புல் மார்க்கெட் கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: rapheal on December 21, 2020, 07:09:50 AM
இந்த செய்தி கிரிப்டோ சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என நான் நினைக்கிறேன். இப்போது பிட்காயின் மிக வலிமையான உள்ளது . இதன் தேவையும் மிக அதிகமாக உள்ளதால் கிரிப்டோ சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: Stgeorge on December 25, 2020, 06:10:57 AM
இது நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நான் நினைக்கிறேன். எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் பல தடவைகள் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து பிறகு முதலீடு செய்யுவது மிகவும் நல்லது.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: rapheal on April 13, 2021, 08:09:27 AM
இப்போது உலகம் முழுவதும் கொரானா வேகமாக அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு இது உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது பொருளாதாரம் மெதுவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இப்போது உலகில் பல இடங்களில் lockdown இருப்பதால் அதிகமான மக்கள் கிரிப்டோவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நோயால் இந்த ஆண்டும் பிரச்சினைகள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: abc123 on August 22, 2021, 01:22:21 PM
சென்ற ஆண்டு கொரோனா செய்திகள் பங்கு சந்தைகள் மற்றும் கிரிப்டோ சந்தை ஆகியவறிறில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதும் கொரோனா பற்றி பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இனி இந்த செய்திகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இது பற்றிய பீதி மக்களிடம் மறைந்து விட்டது. மேலும் வீழ்ச்சி அடைந்த சந்தைகள் மீட்சியடைந்து வருகின்றன.  நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால் பீதியடையாமல் முதலீடு செய்யலாம்.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: micjoh on November 18, 2021, 12:32:44 PM
இது போன்ற பல செய்திகள் கிரிப்டோ சந்தையில் வந்து கொண்டே தான் இருக்கும். இதனால் தான் பிட்காயின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. நல்ல செய்தி வரும் போது மேலே செல்கிறது.  ஆனால் உங்கள் கிரிப்டோ நாணயங்களை hold செய்யுங்கள். இப்போது விற்க வேண்டாம்.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: abc123 on February 23, 2022, 04:44:51 PM
இங்கிலாந்து நாட்டில் புது வகையான ஒரு கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளதாகவும் இது covid19ஐ விட அதிவேகமானது எனவும் தொலைக்காட்சியில் செய்திகள் வந்து வண்ணம் உள்ளன. இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கொரோனாவால் 2020ல் கிரிப்டோ சந்தை மிகப் பெரிய வீழ்ச்சிஐ கண்டது. ஆனால் இப்போது கொரோனாவின் ஆதிக்கம் கிரிப்டோ சந்தை மற்றும் ஸ்டாக் மார்க்கெட்இல் குறைந்து விட்டது. இப்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் போர் பதற்றம் கிரிப்டோ மார்க்கெட்ஐ வீழ்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: whitenem on March 09, 2022, 12:18:08 PM
இங்கிலாந்து நாட்டில் புது வகையான ஒரு கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளதாகவும் இது covid19ஐ விட அதிவேகமானது எனவும் தொலைக்காட்சியில் செய்திகள் வந்து வண்ணம் உள்ளன. இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இனி கொரோனாவால் கிரிப்டோ சந்தையில் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். ஏனென்றால் மக்கள் இதற்கு பழகி விட்டார்கள். ஆனால் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிந்தால் மீண்டும் கிரிப்டோ மார்க்கெட் சகஜ நிலைக்கு வரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: Stgeorge on March 10, 2022, 07:22:41 AM
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தான் அதிக மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது கிரிப்டோ சந்தையில். நேற்று உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற நிலையில் கிரிப்டோ சந்தை பம்ப் ஆக தொடங்கியது. ஆனால் இன்று பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. பிட்காயின் பியர் மார்கெட்டுக்குள் சென்றுவிட்டதா அல்லது விரைவில் மீட்கப்படுமா என்று தெரியவில்லை.
Title: Re: இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?
Post by: abc123 on March 10, 2022, 09:01:07 AM
இங்கிலாந்து நாட்டில் புது வகையான ஒரு கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளதாகவும் இது covid19ஐ விட அதிவேகமானது எனவும் தொலைக்காட்சியில் செய்திகள் வந்து வண்ணம் உள்ளன. இந்த செய்தி crypto marketல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இப்போது கொரோனாவால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போரால் எல்லா மார்க்கெட்களும் மாற்றத்தை சந்தித்தன. கிரிப்டோ சந்தை மற்றும் ஸ்டாக் மார்க்கெட் ஆகியவை பெரிய வீழ்ச்சியை கண்டது. ஆனால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவை ATHஐ எட்டின. குறிப்பாக கிரிப்டோ சந்தை எப்போது recover ஆகும் என்பது மிகப் பெரிய கவலையாக உள்ளது முதலீட்டாளர்களுக்கு.