Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 01:49:35 AM

Title: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: mnopq on December 21, 2020, 01:49:35 AM
கிரிப்டோகரன்சிகள் தான் இந்த உலகத்தின் எதிர்காலம் என்று அதிகமான மக்கள் கூறுகின்றனர் அதை நாம் கேள்விபட்டிருப்போம். இதை ஒரு சாதாரண பணமாக எல்லா மக்களாலும் பயன்படுத்த முடியுமா? பயன்படுத்த முடியுமானால் இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: Stgeorge on December 27, 2020, 03:22:48 PM
இப்போது சில இடங்களில் பொருட்கள் வாங்க மக்கள் பிட்காயின் போன்ற நாணயங்களை பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் இது கடினம். ஏனெனில் கிரிப்டோ கரன்சிகளின் விலை நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருக்கும்.
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: abc123 on December 28, 2020, 06:35:54 AM
இது எல்லா மக்களாலும் பயன்படுத்த முடியாது. இப்போதும் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் usdt போன்ற நிலையான நாணயங்கள் சற்று வாய்ப்பை அதிகப்படுத்தலாம். மேலும் தற்போது கிரிப்டோ கரன்சிகளுக்கு பல நாடுகளில் தடை இருப்பதும் நாம் அறிந்ததே.
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: BullRuN on December 28, 2020, 04:59:15 PM
அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன ஏனென்றால் தற்போது அதிகமாக ஸ்டேபிள் காயின்கள் வந்துவிட்டது பல நாடுகள் தங்களுக்கான தனி நாணயங்களை உருவாக்குகிறது.
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: rapheal on March 28, 2021, 01:21:02 PM
அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன ஏனென்றால் தற்போது அதிகமாக ஸ்டேபிள் காயின்கள் வந்துவிட்டது பல நாடுகள் தங்களுக்கான தனி நாணயங்களை உருவாக்குகிறது.
மேலும் இப்போது பிட்காயினை கொடுத்து பல இடங்களில் பொருட்களை வாங்கலாம். குறிப்பாக சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் பிட்காயினைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் கார்களை வாங்கலாம் என தெரிவித்துள்ளது. இது பிட்காயினின் பயன்பாட்டை அடுத்த ஒரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: whitenem on August 09, 2021, 01:19:53 PM
நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால் உலகின் பல இடங்களில் கிரிப்டோ கரன்சிகளை சாதாரண பணத்தைப் போல பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். பொருட்களூ வாங்க விற்க, காபி ஷாப், பெரிய மால்கள், திரையரங்குகள் போன்று இன்னும் அதிகமான இடங்களில் பயன்படுத்திவருகின்றனர். இது இன்னும் அதிகரித்து கொண்டே தான் வரும்.
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: poles1469 on August 13, 2021, 05:50:51 AM
இப்போது எதிர்காலம். டிபிஎக்ஸ் டோக்கனைப் பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறார்களா?
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: micjoh on March 09, 2022, 04:26:07 AM
இப்போது கிரிப்டோ கரன்சிகளை மக்கள் பெருமளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மக்கள் வரி கட்டுவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் மற்றும் பல விஷயங்களுக்கும் பிட்காயினை பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பிட்காயின் ATM  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: Stgeorge on October 28, 2022, 06:57:35 AM
இப்போதே மக்கள் கிரிப்டோகரன்சிகளை பணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பல நாடுகளில் பிட்காயின் ATMகள் நிறுவப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
Title: Re: எதிர்காலத்தில் கிரிப்டொகரன்சிகளை பணமாக பயன்படுத்த முடியுமா?
Post by: abc123 on April 11, 2023, 03:54:38 PM
இப்போதே மக்கள் கிரிப்டோகரன்சிகளை பணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பல நாடுகளில் பிட்காயின் ATMகள் நிறுவப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இவற்றின் பயன்பாடு மேன்மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இவற்றில் usdt போன்ற நிலையான நாணயங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனெனில் பிட்காயினின் விலை எப்போதும் நிலையாக இருக்காது.