Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: abc123 on December 31, 2020, 10:30:31 AM

Title: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: abc123 on December 31, 2020, 10:30:31 AM
XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் விலை அதிகரிக்குமா?
Title: Re: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: Stgeorge on January 05, 2021, 07:41:44 AM
XRP தற்போது மோசமான நிலையில் உள்ளது. அமெரிக்க அரசின் ஒரு அமைப்பான sec ஆனது இதன் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. எனவே xrpயின் விலை குறைந்து கொண்டே வருகிறது. நீங்கள் புதிதாக இந்த நாணயங்த்தில் முதலீடு செய்ய வேண்டாம். இதன் விலை அதிகரிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ளலாம்.
Title: Re: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: mnopq on January 22, 2021, 09:33:25 AM
நீங்கள் கூறுவது போல் XRPன் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதன் மீது சில குற்றசாட்டுகளை sec கூறுகிறது. XRP ஆனது சரியான ஆவணங்களை சமர்ப்பித்தாலே அல்லது இந்த வழக்கிலிருந்து விடுபட்டாலோ இதன் விலை அதிகரிக்கலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: BullRuN on March 10, 2021, 12:57:52 PM
இதன் விலை குறைவதற்கு SEC இதன் மீது கொடுத்த வழக்கு தான் காரணம். தற்போது இதன் விலை சற்று அதிகரித்து வருகிறது. இதில் தின வர்த்தகம் செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: rapheal on March 18, 2021, 04:04:13 PM
XRPயில் முதலீடு செய்ய விரும்பினால் அதை நீண்டகால முதலீட்டுக்கு ‌வாங்கி‌ hold செய்யுங்கள். இது ஒரு மிகவும் சக்திவாய்ந்த நாணயம். எனவே விரைவில் இதன் பிரச்சினைகள் தீரும் எனவும் நினைக்கிறேன். மேலும் இதற்கு புதுப்பித்தல்களும் தேவை. எனவே எதிர்காலத்தில் platform upgradeம் வரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: mnopq on October 06, 2021, 09:52:27 AM
நிச்சயமாக இதன் விலை அதிகரிக்கும். உங்களிடம் XRP இருந்தால்  hold செய்வது நல்லது. தற்போது XRPஇன் விலை $1ஆக இருக்கிறது. இது ஒரு லாபகரமாக வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பு ஆகும்.
Title: Re: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: micjoh on November 18, 2021, 12:21:19 PM
தற்போது XRP வலுவாக தான் உள்ளது. இது பெரிய வங்கிகளுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் விலை குறைவதற்கு பிட்காயினின் விலை குறைந்து வருவதுதான் காரணம். இப்போது நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் தாராளமாக முதலீடு செய்யலாம். இது விரைவில் ATHஐ எட்டும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது.
Post by: abc123 on March 13, 2022, 05:42:04 PM
XRPயின் விலை ஏன் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் விலை அதிகரிக்குமா?
XRP ஒரு நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற நாணயம் ஆகும். நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் hold செய்யுங்கள். XRP நாணயத்தை பொறுத்தவரை நாம் பொறுமையாக காத்திருந்தால் அதிகமாக லாபம் பெறலாம். ஒவ்வொரு பிட்காயின் ஹால்வீனுக்கு பிறகும் XRP பல மடங்கு லாபம் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம்.