Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 10, 2021, 04:32:11 PM

Title: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: shark on February 10, 2021, 04:32:11 PM
தற்போது கிரிப்டோ கரன்சிகள் தடைசெய்யப்படும் என்ற செய்தி பரவுகிறது அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: micjoh on March 04, 2021, 05:48:33 PM
இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த பிரச்சினை நாடாளுமன்றம் வரைக்கும் சென்றுள்ளது. எனவே அரசு இதில் அதிக கவனத்துடன் இருப்பதாக தெரிகிறது.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: rapheal on March 05, 2021, 08:44:36 AM
கிரிப்டோ கரன்சிகளை தடை செய்வதற்கான சட்ட ஆவணங்களை பாராளுமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.ஆனால் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தின் மீது எதிர்காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: BullRuN on March 08, 2021, 05:03:49 PM
சென்ற வாரம் வந்த செய்தியை பார்க்கும் போது கிரிப்டோ வர்த்தகத்தை தடை செய்ய வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். ஆனால் இதை ஒழுங்கு படுத்த பல சட்டங்களை இயற்றலாம்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: Stgeorge on March 17, 2021, 03:21:01 PM
இப்போது தடை பற்றி  அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. இது தடை செய்யப்படுமா அல்லது இல்லையா அல்லது இதற்கான ஒழுங்கு முறைகள் உருவாக்கப்பட்டு அதன் படி வர்த்தகம் நடை பெறுமா என்று உறுதியாக செல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக இதில் ஒன்றை அரசு நடைமுறை படுத்துவது உறுதி என நான் நினைக்கிறேன்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: whitenem on April 16, 2021, 02:56:11 PM
இப்போது நாடாளுமன்றம் நடைபெறவில்லை. இனி நாடாளுமன்றம் கூடுவதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகலாம். எனவே இப்போது கிரிப்டோ தடை பற்றிய செய்திகள் அமைதியாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு தான் தெரியும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: micjoh on November 07, 2021, 11:17:06 AM
கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படாது என பல செய்திகள் வருகின்றன. இந்தியாவில் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் கிரிப்டோ வர்த்தகம் நடைப்பெறுவதாக செய்திகள் வருகின்றன. தடை செய்யப்பட்டால் இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதற்கு புதிய சட்டம் கொண்டுவருவதாக பல செய்திகள் கூறுகின்றன.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: abc123 on March 24, 2022, 05:08:33 PM
இனி கிரிப்டோ கரன்சிகளை தடை செய்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு ஏனெனில் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படாது என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்வது தடை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டாலும் முப்பது சதவீதம் வரிகட்ட கூறுவது மிகவும் வருத்தமான செயல் ஆகும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா
Post by: Stgeorge on March 25, 2022, 12:28:47 PM
கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்வது தடை செய்யப்படாது. ஆனால் நாம் வருத்தப்பட நேரிடும். நாம் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வரிகட்ட நேரிடும். ஏனெனில் கிரிப்டோவில் வர்த்தகம் செய்பவர்கள் ஆண்டுக்கு முப்பது சதவீதம் வரிகட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது  கிரிப்டோ வர்த்தகர்களுக்கு பெரிய இழப்பாக தான் இருக்கும்.