Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 10, 2021, 04:35:55 PM

Title: முதலீட்டாளர்கள் நிலை
Post by: shark on February 10, 2021, 04:35:55 PM
தற்போது கிரிப்டோ கரன்சிகள் தடைசெய்யப்பட்டால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் எப்போதும் கிரிப்டோ ஏற்றத்தில் இருக்காது தற்போது தடை செய்யப்பட்டால் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள்.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: micjoh on March 04, 2021, 05:53:15 PM
நிச்சயமாக முதலீட்டாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் கிரிப்டோ கரன்சிகளை பணமாக மாற்ற முதலீட்டாளர்களுக்கு சிறிது காலம் வழங்கலாம் என பலர் கூறுகின்றனர்.எனவே இந்த விஷயத்தில் முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: BullRuN on March 09, 2021, 05:21:17 PM
முதலீட்டாளர்கள் இப்போது பயப்பட வேண்டாம். இதற்கு சில கால அவகாசம் தருவார்கள்.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: rapheal on March 12, 2021, 12:46:45 PM
தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது கிரிப்டோகரன்சிகளை அரசு முழுமையாக தடை செய்ய மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். பங்கு சந்தைகளுக்கு சட்டங்கள் இருப்பது போல் கிரிப்டோவிற்கும் பல சட்டங்களை இயற்றலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: abc123 on August 27, 2021, 02:19:21 PM
முதலீட்டாளர்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்படாது. இதை முறைப்படுத்த இதற்கு சட்டங்கள் கொண்டுவரப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே கிரிப்டோ கரன்சிகளில் நாம் முதலீடு செய்யலாம். இப்போது கிரப்டோகரன்சிகளின் பயன்பாட்டில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: mnopq on September 01, 2021, 04:36:06 PM
நாம் கவலை அடைய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு சாதகமாக தான் சட்டங்கள் வரும். நாம் வருமான வரி மட்டும் கட்ட வேண்டியிருக்கும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து வருவதால் இது தடை செய்யப்படமாட்டாது.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: Stgeorge on December 25, 2021, 05:28:40 PM
கிரிப்டோ முதலீட்டாளர்கள் பயப்படவேண்டியதில்லை. அதாவது முதலில் கிரிப்டோ தடை செய்யப்படும் என அரசு கூறியது. அதன் பிறகு கிரிப்டோவின் பயன்பாடு காரணமாக இதை சீர்படுத்த சட்டம் இயற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே உங்களிடம் இருக்கும் கிரிப்டோ கரன்சிகளை பயப்பட்டு விற்க வேண்டாம். Hold செய்யுங்கள் அல்லது தின வர்த்தகம் செய்யுங்கள்.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: whitenem on February 16, 2022, 06:46:54 AM
தற்போது கிரிப்டோ கரன்சிகள் தடைசெய்யப்பட்டால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் எப்போதும் கிரிப்டோ ஏற்றத்தில் இருக்காது தற்போது தடை செய்யப்பட்டால் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள்.
இப்போது இந்தியாவில் கிரிப்டோவிற்கு தடை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் நல்ல செய்தியாக இருந்தாலும் மறுபுறம் இதற்கு 30% வரிகட்டவேண்டும் என கூறியுள்ளார்கள். இது சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் தின வர்த்தகம் செய்பவர்களை மிகவும் பாதிக்கும். இதனுடைய வரியை குறைந்தால் மிகவும் நலமாக இருக்கும் என பலர் கூறுகின்றனர். 
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: whitenem on April 07, 2022, 12:31:36 PM
கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முப்பது சதவீதம் வரி மற்றும் 1% TDS  கட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய அடியாகும். இந்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து கணக்கிட்டு ஒரு வருடம் முடியும் போது வரி மற்றும் TDS கட்ட வேண்டும்.
Title: Re: முதலீட்டாளர்கள் நிலை
Post by: abc123 on July 27, 2022, 01:54:05 PM
தற்போது இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகம் செய்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்களின் கிரிப்டோகரன்சிகளை முற்றிலும் விற்றுவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. மீதமுள்ளவர்கள் வெளிநாட்டு எக்ஸ்சேஞ்ச்களுக்கு மாற்றியுள்ளனர்.