Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 09, 2021, 10:14:18 AM

Title: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: mnopq on May 09, 2021, 10:14:18 AM
இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் ‌$100000ஐ எட்டுமா?
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: micjoh on May 09, 2021, 10:23:44 AM
இந்த ஆண்டு பிட்காயின் ஒரு லட்சம்$ஐ விட அதிகமாக செல்லும் என நான் நம்புகிறேன். பல கிரிப்டோ நிபுணர்களின் கருத்து கணிப்புகளும் பிட்காயின் ஒரு லட்சம்$ஐ கடக்கும் என தெரிவிக்கின்றது. மேலும் இப்போது பிட்காயினை வாங்கி சில‌ மாதங்களுக்கு வைத்திருங்கள். பிட்காயின் ஒரு லட்சம்$ஐ எட்டியவுடன் விற்று விடுங்கள்.
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: whitenem on May 15, 2021, 01:53:22 PM
இந்த ஆண்டில் பிட்காயின் $100000 மற்றும் அதை விட‌ அதிகமாக அதிகரிக்கும் என பல கிரிப்டோ மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது இதன் விலை சில நாட்களாக‌ குறைந்து வருகிறது. எனவே பிட்காயின் மற்றும் சிறந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய நினைத்தால் இது ஒரு ஏற்ற நேரம் ஆகும்.
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: micjoh on November 08, 2021, 04:53:53 AM
இந்த ஆண்டு பிட்காயின் $100000ஐ எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பிளான்Bக்கான S2F மாடல் பிட்காயின் chart and RSI காட்டுகிறது. ஆனால் இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: whitenem on March 12, 2022, 05:44:23 PM
இப்போது பிட்காயினின் விலை சரிவடைந்து காணப்படுகிறது. நாம் இப்பொழுது பியர் மார்க்கெட்டுக்குள் இருக்கிறோம் என நான் நினைக்கிறேன். மேலும் இதன் விலை இன்னும் வீழ்ச்சி அடையலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் ஒருவேளை ஆல் டைம் ஹைஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: Stgeorge on March 13, 2022, 07:47:08 AM
இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் ‌$100000ஐ எட்டுமா?
இந்த ஆண்டு பிட்காயின் $10,00,00ஐ எட்டுவது மிகவும் கடினமான ஒன்று ஆகும். நாம் இப்போது பியர் மார்கெட்டுக்குள் இருக்கிறோம். இது இன்னும் $25,000 வரை செல்லலாம் என பலர் கணித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் $69,000ஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: abc123 on March 17, 2022, 05:42:24 AM
இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் ‌$100000ஐ எட்டுமா?
தற்போது பிட்காயினின் விலை 41,000$ஆக உள்ளது. ஏறக்குறைய நான்கு மாதத்தையும் விட அதிகமான நாட்களாக வீழ்ச்சி அடைந்த பிறகு இப்போது சற்று மீட்சியடைந்து வருகிறது. நேற்று FED மீட்டிங்ல் .025% என்ற குறைந்த இண்ட்ரஸ்ட் உயர்த்தப்பட்டதால் stock market பம்ப் ஆக தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து கிரிப்டோவும் பம்ப் ஆகலாம் என நான் நினைக்கிறேன். மேலும் பிட்காயின் விலை எவ்வளவு செல்லும் என என்னால் கணிக்க முடியவில்லை.
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: Stgeorge on March 18, 2022, 06:08:09 AM
ஒருவேளை பிட்காயினின் விலை இந்த ஆண்டு $100,000ஐ எட்டலாம். ஏனெனில் இப்போது பிட்காயின் சம்மந்தப்பட்ட பல நேர்மறையான செய்திகள் வருகின்றன. அமெரிக்கா இந்தியா துபாய் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பிட்காயினை தடை செய்யாமல் ஆதரிப்பது மற்றும் நீண்ட காலம் hodl செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்ற செய்திகள் வருவது பிட்காயினின் விலை உயர்த்தலாம் என நான் நினைக்கிறேன்
Title: Re: இந்த ஆண்டில் பிட்காயின்
Post by: micjoh on April 05, 2022, 06:24:31 PM
பிட்காயின் நிச்சயமாக $100,000ஐ எட்டும் என பிட்காயின்இன்  பல விதமான சாட்கள் காட்டுகின்றன. அதை நானும் நம்புகிறேன். ஆனால் அது எப்போது நடக்கும் என தெரியாது. ஒருவேளை அடுத்த ஹால்வீனுக்கப் பிறகு கூட பிட்காயின் $100,000ஐ எட்டலாம் என எனக்கு சிறு நம்பிக்கை உள்ளது.