Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 19, 2021, 01:17:02 PM

Title: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: mnopq on May 19, 2021, 01:17:02 PM
பிட்காயின் விலை தொடர்ந்து கீழே சென்றுகொண்டிருக்கிறது. இதன் விலை இப்போது $39,500ஆக உள்ளது. சிலர் bull market முடிந்துவிட்டது என கூறுகிறார்கள். இப்போது இதில் முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா? உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: Stgeorge on May 19, 2021, 01:53:25 PM
Bull market முடிந்துவிட்டதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை வாங்க வேண்டிய நேரம் ஆகும். இப்போது day chartல் நீங்கள் பார்க்கலாம் RSI and stoch RSI ஆனது oversoldல் உள்ளதை. மேலும் பல கிரிப்டோ நிபுணர்களும் இது வாங்க வேண்டிய நேரம் என கூறுகிறார்கள்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: micjoh on May 20, 2021, 11:13:49 AM
இப்போது பிட்காயினை வாங்கி hold செய்யுங்கள். Tesla  போன்ற பல நிறுவனங்கள் பிட்காயினில் முதலீடு செய்துள்ளன. அந்த நிறுவனங்கள் பிட்காயினை இன்னும் விற்கவில்லை மாறாக hold செய்துள்ளன. இப்போது விலை மலிவாக உள்ளதால் பிட்காயின் மற்றும் நம்பகமான அல்ட்காயின்ஸ்களை வாங்கி சில மாதங்களுக்கு hold செய்யுங்கள். நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: whitenem on May 23, 2021, 03:19:31 PM
பிட்காயினின் விலை கீழே தான் உள்ளது. இதன் $33250 ஆக உள்ளது. இது முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இதன் விலை சில வாரங்களில் இன்னும் அதிகரிக்கும் மற்றும் இதன் எதிர்காலம் பிரகாசமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: Stgeorge on May 31, 2021, 06:31:44 AM
இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இதன் விலை மிக குறைவாக உள்ளது. இதற்கு விரைவில் றிலீஃப் றாலி இருக்கலாம். அதாவது $45,000 முதல் $49,000 வரை பிட்காயினின் விலை உயரே செல்லலாம்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: rapheal on June 09, 2021, 05:41:09 PM
இப்போது விலை குறைவாக இருப்பதால் இது கொள்முதல் செய்ய வேண்டிய நேரம் ஆகும். இப்போது விக் ஆஃப் அக்குமுலேஷன் என்ற chart pattern படி பிட்காயின் வர்த்தகம் நடைபெறுகிறது என பலர் கூறுகின்றனர். அதன் படி பார்த்தால் இதன் விலை சில நாட்களில் சற்று அதிகரிக்கலாம்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: abc123 on June 14, 2021, 09:37:43 AM
எலன் மாஸ்க்ன் டுவிட்டால் இன்று பிட்காயின் விலை $35,000 விருந்து $39600 வரை அதிகரித்துள்ளது. மேலும் இதன் விலை $42,000 வரை அதிகரிக்கலாம். மேலும் விரைவில் டெட் கிராஸ் வர இருப்பதாக பலர் கூறுகின்றனர். இது நடந்தால் இதன் விலை $30000 வரை கீழே செல்லலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் யாரும் பயத்தால் பிட்காயினை விற்றுவிடாதீர்கள். அதை வைத்திருங்கள். நிச்சயமாக எதிர்காலத்தில் இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: Stgeorge on August 29, 2021, 06:21:09 PM
இதை சரியாக சொல்ல முடியாது. ஒரு பிட்காயின் தொடர்பாக மோசமான செய்தி ஒன்று வந்தாலும் கீழே செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே இப்போது நீண்ட கால முதலீடு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். நிச்சயமாக நீண்ட கால முதலீடு லாபத்தை தரும்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: mnopq on September 21, 2021, 04:37:41 PM
பிட்காயினின் விலை அதிகரிக்கலாம். ஆனால் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். Future trading and margin trading செய்வதை நான் பரிந்துரைக்க மாட்டேன். இதில் அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயம் நஷ்டம் இல்லாமல் வர்த்தகம் செய்யலாம்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: micjoh on March 04, 2022, 12:09:31 PM
பிட்காயின் விலை தொடர்ந்து கீழே சென்றுகொண்டிருக்கிறது. இதன் விலை இப்போது $39,500ஆக உள்ளது. சிலர் bull market முடிந்துவிட்டது என கூறுகிறார்கள். இப்போது இதில் முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா? உங்களுடைய கருத்து என்ன?
என் கருத்து நீங்கள் பிட்காயினில் இப்போது முதலீடு செய்யலாம். ஏனெனில் பிட்காயினின் விலை பெருமளவில் கீழே சென்று விட்டது. உங்கள்  பணத்தை இப்போது சிறிது சிறிதாக முதலீடு செய்யுங்கள். நீங்கள்stock marketஐ இப்போது பார்க்க வேண்டாம். ஏனெனில் இது அதிகமாக இன்னும் வீழ்ச்சி அடையும். ஆனால் தற்போது தங்கத்தில் மக்கள் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு பிறகு மக்கள் தங்கத்திலிருந்து பிட்காயினுக்கு முதலீடு செய்ய மாறிவிடுவார்கள். எனவே விரைவில் பிட்காயினின் விலை உயர வாய்ப்பு உள்ளது என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா?
Post by: Stgeorge on October 03, 2022, 04:37:15 AM
பிட்காயினின் விலை தற்போது அதிகரிக்க வாய்ப்பு இல்லை என நான் நினைக்கிறேன். S&P500இன் மாந்திலி சார்ட்இல் கிஸ்ஆஃப்டெத் என்கிற பியரிஸ் நிலை உருவாகியுள்ளது. எனவே பிட்காயின் பதினொன்றாயிரம் டாலர் வரை கீழே செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.