Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on July 12, 2021, 08:06:50 AM

Title: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: mnopq on July 12, 2021, 08:06:50 AM
பிட்காயினின் விலை $20,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர். இப்போது வைக் ஆஃப் அக்குமுலேஸன் படியும் இது செல்லவில்லை. இதனுடைய அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on July 12, 2021, 01:31:32 PM
காத்திருப்பது நல்லதல்ல என நான் நினைக்கிறேன். இப்போது உங்களிடம் உள்ள பாதி பணத்தை முதலீடு செய்யலாம். மீதமுள்ளதை விலை குறையும் போது படி படிப்படியாக முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: micjoh on July 13, 2021, 06:10:59 AM
சமூக‌ ஊடகங்களில் மக்களின் மன நிலையை பார்க்கும் போது பெரும்பாலான மக்கள் பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைய போகிறது என கூறுகின்றனர். நான் இதன் விலை $24,000 வரை குறையலாம் என நான் நினைக்கிறேன்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் காத்திருக்கலாம். மேலும் தற்போதுள்ள விலையும் முதலீடு செய்ய ஏற்றதுதான்.
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on July 17, 2021, 12:02:00 PM
பிட்காயினின் தற்போதைய நிலையின் படி இது 20,000$ஐ எட்டலாம் என பலர் கூறுகின்றனர். இது இந்த விலையை எட்டினால் பியர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து விடுவோம்‌. குறிப்பாக இப்போதும் பெரிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் பிட்காயினை வாங்கிக் கொண்டிருப்பதாக பல செய்திகள் வருகின்றன.
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: poles1469 on August 13, 2021, 06:06:32 AM
மற்றும் altcoins ஒருவேளை dbx போல வளரும்
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: abc123 on August 15, 2021, 02:49:26 AM
தற்போது bitcoinன் சம்பந்தப்பட்ட செய்திகளை பார்க்கும் போது விலை குறைய வாய்ப்பில்லை. ஆனால் மோசமான செய்திகள் வந்தால் பிட்காயினின் விலை நிச்சயமாக குறையும். கிரிப்டோ மார்க்கெட் ல் எப்போது என்ன நிகழும் என யாராலும் கூற முடியாது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் நீண்ட கால முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on December 25, 2021, 05:08:36 PM
பிட்காயின் விலை 69000$ஐ எட்டியபிறகு வீழ்ச்சி அடைந்து 42000$ வரை கீழே சென்றது. இப்போது இதன் விலை $50000ஆக உள்ளது. பிட்காயினின் bull market முடிந்து விட்டது என்றால் இதன் விலை இன்னும் கீழே செல்ல வாய்ப்பு உள்ளது. பிட்காயினின் bull market முடிந்து விட்டது என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: micjoh on February 16, 2022, 06:54:11 AM
பலர் பிட்காயினின் விலை குறையும் எனவும் இன்னும் பலர் அதிகரிக்கும் எனவும் கூறுகின்றனர். ஆனால் இதை எவராலும் உறுதியாக கூற இயலாது. எனவே பிட்காயினின் விலை குறையும் போது ஒவ்வொரு தடவையும் ஒரு குறிப்பிட்ட அளவு வாங்கி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவர் என்றால் இது உங்களுக்கு அதிக அளவில் லாபத்தை தரும்.
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on March 23, 2022, 02:32:49 PM
பிட்காயினின் விலை $20,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர். இப்போது வைக் ஆஃப் அக்குமுலேஸன் படியும் இது செல்லவில்லை. இதனுடைய அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?
பிட்காயின் ஏற்கனவே அதிகமாக கீழே சென்று விட்டது. இப்போது கிரிப்டோவின் மார்க்கெட் கேப் டிரில்லியன் அளவுக்கு உயர்ந்து  இருப்பதாலும் மற்றும் பிட்காயினில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாலும் இதன் விலை $ 20,000 வரை கீழே செல்லுவதற்கு மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளன. மேலும்‌ பல நாடுகள் இதன் மீது ஆர்வமாக உள்ளதால் இது விரைவில் மீட்சி அடையலாம் எனவும் பலர் கூறுகிறார்கள்.
Title: Re: பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: micjoh on April 05, 2022, 06:16:27 PM
பிட்காயினின் விலை $20,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர். இப்போது வைக் ஆஃப் அக்குமுலேஸன் படியும் இது செல்லவில்லை. இதனுடைய அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?
பிட்காயின் ஏற்கனவே அதிகமாக கீழே சென்று விட்டது. இப்போது கிரிப்டோவின் மார்க்கெட் கேப் டிரில்லியன் அளவுக்கு உயர்ந்து  இருப்பதாலும் மற்றும் பிட்காயினில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாலும் இதன் விலை $ 20,000 வரை கீழே செல்லுவதற்கு மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளன. மேலும்‌ பல நாடுகள் இதன் மீது ஆர்வமாக உள்ளதால் இது விரைவில் மீட்சி அடையலாம் எனவும் பலர் கூறுகிறார்கள்.
மேலும் shot termல் இதன் விலை சிறதளவு குறையலாம். ஆனால் நீண்ட கால முதலீட்டில் பிட்காயின்இன் விலை $56,000 வரை செல்லலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் தற்போது கிரிப்டோ சந்தையில் நல்ல நியூஸ்கள் தான் இருக்கிறது. ஒருவேளை  கெட்ட செய்திகள் வந்தால் மீண்டும் பியர் மார்க்கெட்டுக்குள் பிட்காயின் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.