Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on August 04, 2021, 06:15:26 PM

Title: பிட்காயின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது
Post by: mnopq on August 04, 2021, 06:15:26 PM
பிட்காயினின் விலை ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் இப்போது நான் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்.
Title: Re: பிட்காயின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது
Post by: whitenem on August 05, 2021, 08:49:25 AM
பிட்காயினின் விலை அதிகரிப்பதற்கான சாதகங்கள் அதிகரித்து வருவதாகவே நான் நினைக்கிறேன். இப்போது hold செய்வது நல்லது.
Title: Re: பிட்காயின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது
Post by: micjoh on February 19, 2022, 08:23:54 AM
$33,000ஐ எட்டியப் பிறகு பிட்காயினின் விலை படிப்படியாக உயர்ந்து 45000$வரை சென்று மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. தற்போது இதன் விலை $40000ஆக உள்ளது. இன்பிளேசன்அதிகரிப்பு, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் பதற்றம் ஆகிய காரணங்களால் பிட்காயின் மட்டுமல்லாது stock market , index போன்றவை சரிவை கண்டுள்ளன.
Title: Re: பிட்காயின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது
Post by: Stgeorge on March 23, 2022, 02:10:48 PM
பிட்காயினின் விலை ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் இப்போது நான் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்.
சென்ற நவம்பர் மாதத்தில் இருந்தே பிட்காயின் பெரிய வீழ்ச்சியை கண்டு வருகிறது. ஆனால் தற்போது இதன் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பிட்காயின் தொடர்பான சில நல்ல செய்திகள் ஆகும். உக்ரைன் மற்றும் ரஷ்யா போரால் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பிட்காயினை பயன்படுத்துவதற்காக பல சட்டங்களை இயற்றுவதாகவும் செய்திகள் வருகின்றன. இவற்றால் பிட்காயினின் விலை சற்று அதிகரித்து கொண்டே வருகிறது.
Title: Re: பிட்காயின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது
Post by: abc123 on March 25, 2022, 08:18:04 AM
பிட்காயினின் விலை ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் இப்போது நான் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்.
தற்போது பிட்காயின் மட்டுமல்ல ஸ்டாக் மார்க்கெட்டும் ஒரு பெரிய வீழ்ச்சிக்கு பின்னர் மெதுவாக மேல் நோக்கி நகர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் குறிப்பாக இப்போது பிட்காயினுக்கு சிறந்த பெரிய நியூஸ்கள் வருகின்றன. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரால் பிட்காயினைஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் வேகமான பரிவர்த்தனை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. எனவே இதன் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கலாம்.  இப்போது விலை குறைவாக உள்ளதால் உடனே வாங்கி hold செய்யுங்கள்.