Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on February 16, 2022, 11:51:59 AM
-
பிட்காயின் இப்போது bear marketக்குள் நுழைந்து விட்டது என பலர் கூறுகிறார்கள். மேலும் 2018ஐ போல் பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகிறார்கள். நான் இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா. உங்களுடைய கருத்து என்ன
-
இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாம் என நான் கூறுகிறேன். ஏனென்றால் இப்போது பிட்காயின் தொடர்பாக பல சிறந்த செய்திகள் வருகின்றன. இந்தியா, ரஷ்யா, எல் சால்வேடார் போன்ற நாடுகளில் பிட்காயின் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. நீண்டகால முதலீடு என்றால் மிகவும் நலமாக இருக்கும். விலை குறைந்தால் hold செய்வது மிகவும் நல்லது.
-
பிட்காயினின் விலை நவம்பர் மாதத்தில் இருந்து சரிந்து வருகிறது. இன்றும் இதன் விலை சரிந்து வருகிறது. இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். உங்களுடைய எல்லா பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்ய வேண்டாம். விலை குறைய குறைய சிறிது சிறிதாக முதலீடு செய்யுங்கள். எந்த அளவுக்கு விலை குறையும் என யாருக்கும் கூற முடியாது. நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும்.
-
பிட்காயினின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே ஒவ்வொரு supportலும் சிறிது சிறிதாக வாங்குவது நல்லது. பெரும்பாலான மக்கள் பிட்காயினின் விலை $30,000யும் விட கீழே செல்லும் என கூறுகிறார்கள். எப்படியிருந்தாலும் பொறுமையாக காத்திருந்தால் லாபம் கிடைப்பது நிச்சயம்.
-
பிட்காயின் இப்போது bear marketக்குள் நுழைந்து விட்டது என பலர் கூறுகிறார்கள். மேலும் 2018ஐ போல் பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகிறார்கள். நான் இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா. உங்களுடைய கருத்து என்ன
பிட்காயின் இப்போது பியர் சந்தைக்கு சென்று விட்டதா அல்லது போகவில்லையா என்று என்னால் கூறமுடியாது. ஆனால் பிட்காயினின் விலை சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வருவதுடன் , தற்போது அதிக வீழ்ச்சியை கண்டுள்ளது. இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம் என நான் பரிந்துரைக்கிறேன். ஆனால் படிப்படியாக (ஒவ்வொரு supportலும்) முதலீடு செய்வது நல்லது.
-
பிட்காயினின் விலை $12,000 ஐயும் விட குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்போது DCA செய்வது நல்லது.
-
இப்போது முதலீடு செய்ய வேண்டாம் என நான் கருதுகிறேன். ஏனெனில் பிட்காயினின் விலை பன்னிரண்டாயிரம் வரை செல்லலாம் டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்றவற்றில் பலர் கூறுகிறார்கள். இதுவரை பிட்காயினின் விலை வீழ்ச்சி அடையும் என அவர்கள் கூறியது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
-
தற்போதுள்ள செய்திகள் பிட்காயினுக்கு சாதகமாக உள்ளன. டாலர் இண்டெக்ஸ் வீழ்ச்சி அடைந்து வருவது மற்றும் அமெரிக்க வங்கிகள் தீவாலானது போன்ற பல செய்திகள் பிட்காயினுக்கு சாதகமாக உள்ளது. ஆனாலும் பிட்காயினுக்கு மோசமான செய்திகள் எப்போது வரும் என கூறமுடியாது. எனவே இப்போது முதலீடு செய்வது உங்கள் விருப்பம் ஆகும்.
-
, பிட்காயினில் இப்போது முதலீடு செய்யலாம். சீனாவின் கிரிப்டோ அடாப்சன் மற்றும் Blockrockஇன் bitcoin spot ETFஅப்ரூவல் செய்தி கிரிப்டோ மார்க்கெட்டை பம்ப் செய்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம். Bitcoinஇன் விலை 45000$ வரை மேலே செல்லலாம்.
-
இப்போது பிட்காயினில் முதலீடு செய்வதை விட அல்ட்நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது என்பது என்னுடைய கருத்து ஆகும். ஏனெனில் பிட்காயின் மிக அதிக அளவு பம்ப் ஆகி விட்டது. மேலும் இப்போது அல்ட்நாணயங்களின் விலையும் கீழே உள்ளது. எனவே இப்போது வாங்கினால் சில மாதங்களுக்குள் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.