Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 10, 2022, 06:06:30 AM

Title: அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: whitenem on March 10, 2022, 06:06:30 AM
தற்போது அல்ட்காயின்ஸ் சீசன் இண்டெக்ஸ் இருபத்திஒன்பதாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இது இருபத்தி இரண்டு வரை குறைந்து உள்ளது. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய ஏற்ற தருணம் என பலர் கூறுகின்றனர். நான் இப்போது போல்காடாட் மற்றும் செயின்லிங்க் ஆகிய நாணயங்களை வாங்கலாம் என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் முக்கியம்.
Title: Re: அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: Stgeorge on March 11, 2022, 11:55:58 AM
தற்போது அல்ட்காயின்ஸ் சீசன் இண்டெக்ஸ் இருபத்திஒன்பதாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இது இருபத்தி இரண்டு வரை குறைந்து உள்ளது. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய ஏற்ற தருணம் என பலர் கூறுகின்றனர். நான் இப்போது போல்காடாட் மற்றும் செயின்லிங்க் ஆகிய நாணயங்களை வாங்கலாம் என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் முக்கியம்.

இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள். ஆனால் இப்போது நீங்கள் முதன்மையான சிறந்த அல்ட்காயின்ஸ்களை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்.சிறிய அல்ட்காயின்ஸ்களை தேர்வு செய்யாதீர்கள் அதாவது coin market capல் கீழே இருக்கும் நாணயங்களை தேர்வு செய்யாதீர்கள் ஏனெனில் கிரிப்டோ சந்தை பியராக இருந்தால் இந்த நாணயங்களால் பிழைத்திருக்க முடியாது.
Title: Re: அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: micjoh on March 15, 2022, 12:49:48 PM
அல்ட்காயின்ஸ்கள் மற்றும் பிட்காயினில் முதலீடு செய்ய ஏற்ற நேரம் இது என நான் கருதுகிறேன். ஏனெனில் தற்போதைய விலை வீழ்ச்சி ஐம்பது சதவீதத்துக்கும் மேல் சென்றுள்ளது. அல்ட்காயின்ஸ்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இன்னும் விலை இறங்குமா அல்லது காத்திருக்க வேண்டுமா என்பதை உறுதியாக கூற இயலாது. எனவே எப்போதும் hold செய்வது மிகவும் நல்லது.
Title: Re: அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: abc123 on March 17, 2022, 05:47:47 AM
நான் சில நாணயங்களில் முதலீடு செய்துள்ளேன். நான் அதிகமாக போல்காடாட்ல் முதலீடு செய்துள்ளேன். கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்ததாலும் நான் அவற்றை hodl செய்யலாம் என நான் தீர்மானித்துள்ளேன். மேலும் தற்போது கிரிப்டோவிற்கு பல சிறந்த செய்திகள் வருவதால் கிரப்டோ சந்தை பம்ப் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன.