Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on March 10, 2022, 06:19:07 AM
-
இந்தியாவில் கிரிப்டோ டிரேடிங் மற்றும் பரிவர்த்தனை தடை செய்யப்படாது என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் முப்பது சதவீதம் வரிகட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. இது சிறிய முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சிறிய முதலீட்டாளர்களில் பலர் யூ.கே போன்ற நாடுகளில் உள்ளது போல் மாற்றி அமைத்தால் சற்று நலமாக இருக்கும் என கூறுகின்றனர். இல்லையென்றால் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள் என கூறுகின்றனர். உங்களுடைய கருத்து என்ன

கிரிப்டோ டிரேடிங் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் பிடித்து விட்டு நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு இது ஒரு சிறந்த வருமானத்தை தரக்கூடிய தொழிலாக இருந்தது. இப்போது இது மிகப் பெரிய கஷ்டமாகவும் மற்றும் நஷ்டமாகவும் எல்லோருக்கும் அமைந்துள்ளது. கிரிப்டோ வரி தொடர்பாக சட்டத்தை மாற்றி அமைத்தால் சிறிய மற்றும் ஏழை கிரிப்டோ வர்த்தகர்களுக்கு மிக நன்றாக இருக்கும்.
-
இந்தியாவில் கிரிப்டோ தடை இல்லை என கூறுவது ஒரு நிம்மதியான விஷயம் தான். ஆனால் 30% வரிகட்ட வேண்டும் என்பது சிறிய முதலீட்டாளர்களுக்கு இழைக்கப்படும் பெரிய தீங்கு ஆகும். இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால் UK போன்ற நாடுகளைப் பார்த்தாவது இதை சரி செய்தால் சிறிய முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
-
இந்தியாவில் கிரிப்டோவிற்கு அரசு நிர்ணயித்துள்ள வரி மிகவும் அதிகம். இதை குறைத்தால் பல மக்களின் வாழ்க்கை சற்று சிறப்பாக செல்லும். இல்லையென்றால் பலர் இந்த தொழிலையும் இழக்க நேரிடும். இந்தியா வேலை பற்றாகுறை நிறைந்த நாடு மற்றும் ஏழை நாடுகளில் ஒன்று. எனேவ வரியை குறைத்தால் எதிர்காலத்தில் பலரது வாழ்க்கையை கிரிப்டோ உயர்த்தும்.