Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on April 18, 2022, 12:13:38 PM

Title: பிட்காயின்இன் விலை மீண்டும் கீழே செல்கிறது
Post by: whitenem on April 18, 2022, 12:13:38 PM
பிட்காயினின் விலை $47,000 வரை சென்று விட்டு மீண்டும் கீழே வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் கூறுவது போல் பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதா?
Title: Re: பிட்காயின்இன் விலை மீண்டும் கீழே செல்கிறது
Post by: Stgeorge on June 28, 2022, 04:44:47 AM
உலக பொருளாதார மந்த நிலை மற்றும் இன்பிளேசன் அதிகரிப்பு போன்றவற்றால் பிட்காயினின் விலை குறைந்து கொண்டே வருகிறது. பிட்காயினின் விலை தற்போது $21,000ஆக உள்ளது. இருபதாயிரம் என்பது பிட்காயினுக்கு பெரிய சப்போர்ட்ஆக உள்ளது. இதை தாண்டி கீழே சென்றால் $16,500 மற்றும் $12,000 வரை செல்லலாம் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். இப்போது பிட்காயினில் லாங் எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
Title: Re: பிட்காயின்இன் விலை மீண்டும் கீழே செல்கிறது
Post by: micjoh on June 28, 2022, 08:19:27 AM
பிட்காயினின் விலை $47,000 வரை சென்று விட்டு மீண்டும் கீழே வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் கூறுவது போல் பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதா?
நாம் இப்போது பியர் மார்க்கெட்டில் தான் இருக்கிறோம். ஆனால் இந்த நேரம் பிட்காயினை வாங்கி குவிக்க வேண்டிய நேரம் ஆகும். இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு ஹால்வீன் வரும் போது உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தற்போதைய ஆல்டைம்ஹையான அறுபத்தி ஒன்பதாயிரம் $ஐ கடந்து செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இப்போதே வாங்கி வைத்திருங்கள்.
Title: Re: பிட்காயின்இன் விலை மீண்டும் கீழே செல்கிறது
Post by: abc123 on June 30, 2022, 06:14:08 PM
பிட்காயினின் விலை இன்று -4.8% வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதன் விலை மீண்டும் பதினேழாயிரம் டாலரை எட்டும் என பலர் கூறுகிறார்கள். பிட்காயினின் விலை வீழ்ச்சி அடையும் போது ஒவ்வொரு டிப்பிலும் வாங்குவது மிகவும் நல்லது. நீங்கள் பிட்காயினை இதுவரை வாங்கவில்லையெனில் பிடிப்படியாக வாங்குவது நல்லது. ஏனெனில் வீக்லி RSI போன்ற பல முக்கியமான பல இண்டிகேட்டர்ஸ்  கீழே உள்ளன.
Title: Re: பிட்காயின்இன் விலை மீண்டும் கீழே செல்கிறது
Post by: Stgeorge on July 20, 2022, 07:36:57 AM
இப்போது நம்மால் காண முடியும் பிட்காயினின் விலை ஏழு நாட்களில் இருபது சதவிகிதம் உயர்ந்துள்ளதை. $17,500 வரை கீழே சென்று பிறகு மேல் நோக்கி நகர்ந்து இப்போது $23,350ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. இப்போது வீக்லி முவிங் ஆவரேஜ் 200க்கு மேல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்பிளேசன் அதிகரிப்பு மற்றும் பல மோசமான காரணங்கள் இருப்பதால் பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடைந்து $14,000 வரை கீழே செல்லலாம் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயின்இன் விலை மீண்டும் கீழே செல்கிறது
Post by: micjoh on July 26, 2022, 02:58:14 PM
கடந்த இரண்டு நாட்களாக பிட்காயினின் விலை கீழ் நோக்கி நகர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் பெட்மீட்டிங் என பலர் கூறுகிறார்கள். இன்பிளேசன் மற்றும் இண்ரஸ்ட்ரேட் இந்த மீட்டிங்க்ல் உயர்த்தப்படலாம் என்ற பீதி காரணமாக விலைகள் குறைவதாக மக்கள் கூறுகின்றனர்.