Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 18, 2022, 12:24:16 PM
-
கடைசி ஏழு நாட்களில் பிட்காயின்இன் விலை 7.7%மும் கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் 4%மும் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இப்போது முதலீடு செய்யலாமா
-
இப்போது பிட்காயினின் விலை மிகவும் குறைந்து தான் காணப்படுகிறது. எனினும் பெரும்பாலான மக்கள் இதன் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை பதின்ஏழாயிரம் டாலர் வரை கீழே செல்லலாம் என நான் நினைக்கிறேன். இதை கடந்து கீழே சென்றால் பத்தாயிரம் டாலர்ஐ எட்டலாம். ஆனால் பிட்காயின் எதுவரை கீழே செல்லும் என கூறுவது கடினம். எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் இப்போது முதலீடு செய்து hold செய்யுங்கள்.
-
கிரிப்டோ , ஸ்டாக் மார்க்கெட் என எல்லா மார்க்கெட்டுகளும் ஏழு மாதங்களுக்கு மேல் பியரிஷாகவே உள்ளது. தற்போது பிட்காயின் விலை ஆல் டைம் ஹையில் இருந்து 75%க்கும் அதிகமாக கீழே சென்றுள்ளதை நீங்கள் காணலாம். என்கருத்து என்னவென்றால் நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவர் என்றால் தாராளமாக இப்போது முதலீடு செய்யலாம். தற்போது பிட்காயினின் விலை $20,000ஐ விடவும் கீழே உள்ளதால் இது பிட்காயினை வாங்க மலிவான விலை என நான் நினைக்கிறேன்.
-
இப்போது பிட்காயினில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. அதிகமான மக்கள் பிட்காயினின் விலை $14,000 முதல் $12,000 வரை குறையும் என கூறுகின்றனர். இதற்கு காரணம் S&P500 உட்பட அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் மோசமான செய்திகள் இந்த மாதம் வரை இருப்பதாகக் கூறுகின்றனர். நாளை USAவில் நடைபெறும் மீட்டிங்கில் மோசமான செய்திகள் வந்தால் கிரிப்டோ உட்பட அனைத்து மார்க்கெட்களும் வீழ்ச்சி அடையலாம். எனவே பொறுமையாக காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது.