Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 22, 2022, 07:55:14 AM
-
ஐந்து வருடங்கள் hold செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எந்த நாணயத்தில் முதலீடு செய்வீர்கள். பிட்காயின் இத்திரியம் பைனான்ஸ் போல்காடாட் நாணயங்களிலா அல்லது வேறு நாணயங்களிலா.
-
கிரிப்டோ நாணயங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என யாராலையும் கணிக்க முடியாது. இருந்தாலும் பிட்காயினை வாங்கி சேமிக்கலாம். அடுத்த ஐந்து வருடங்களில் பிட்காயினின் விலை தற்போதுள்ள விலையை விட பல மடங்கு அதிகமாகவும் இருக்கலாம் அல்லது பல மடங்கு கீழேயும் செல்லலாம்.
-
என்னைப்பொறுத்தவரை நான் ஐந்து ஆண்டுகள் கிரப்டோ நாணயங்களை hold செய்யுங்கள் என்று பரிந்துரைக்க மாட்டேன். ஏனெனில் கிரிப்டோ நாணயங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. எனவே உங்களுக்கு லாபம் வரும்போது உடனே எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் பிறகு முதலீடு செய்த பணமும் இருக்காது. மேலும் இப்போது முதலீடு செய்ய போகின்றீர்கள் என்றால், இன்னும் பிட்காயின் மற்றும் அல்ட்நாணயங்களின் விலை குறையும் என பலர் உறுதியாக கூறுகின்றனர். எனவே நன்றாக கிர்ப்டோ மார்க்கெட் பற்றி ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
-
ஐந்து வருடங்கள் hold செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எந்த நாணயத்தில் முதலீடு செய்வீர்கள். பிட்காயின் இத்திரியம் பைனான்ஸ் போல்காடாட் நாணயங்களிலா அல்லது வேறு நாணயங்களிலா.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பிட்காயின் இத்திரியம் பைனான்ஸ் போல்காடாட் ஆகிய நாணயங்களை ஐந்து ஆண்டுகள் hold செய்வதற்கு பயன்படுத்தலாம். இந்த நாணயங்களை கிரிப்டோ உலகில் சிறந்த நாணயங்களாக கருதப்படுகிறது. ஆனால் என்னுடைய ஒரு கருத்து என்னவென்றால் ஒவ்வொரு புல்ரண்ணிலும் இந்த நாணயங்களை விற்றுவிடுங்கள். மீண்டும் விலை குறையும் வரை காத்திருந்து வாங்குங்கள். ஏனெனில் உங்களுக்கே தெரிந்திருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு பிட்காயினின் விலை எவ்வளவு இருந்தது என்றும் இப்போது எவ்வளவு இருக்கிறது என்றும்.