Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 22, 2022, 08:12:59 AM
-
இந்தியாவில் அரசாங்கத்தால் கிரிப்டோ வர்த்தகம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுப் பற்றி உங்கள் கருத்து என்ன.
-
இந்தியாவில் கிரிப்டோ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைப் பற்றி ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில் இங்கு கிரிப்டோ வர்த்தகம் செய்ய முப்பது சதவீதத்தையும் விட அதிகமாக வரி கட்ட வேண்டும். இது சிறிய மற்றும் பெரிய கிரிப்டோ வர்த்தகர்களுக்கு மிக பெரிய நஷ்டமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் கிரிப்டோவிற்கு வரி அதிகம் என நான் நினைக்கிறேன்.
-
அடுத்த ஆண்டு வரி கட்டும் நேரம் வரும் போது அனைத்து கிரிப்டோ வர்த்தகர்களும் தங்களுடைய லாபத்தில் முப்பது சதவீதம் வரி கட்ட வேண்டும்.இதனுடன் ஒரு சதவீதம் TDSஉம் கட்ட வேண்டும். மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக வரி கட்ட வேண்டும். துபாய் போன்ற நாடுகளில் விரி கட்ட வேண்டாம். மேலும் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மிகக் குறைந்த வரி மட்டுமே கட்ட வேண்டும்.
-
இந்தியாவில் கிரிப்டோ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைப் பற்றி ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில் இங்கு கிரிப்டோ வர்த்தகம் செய்ய முப்பது சதவீதத்தையும் விட அதிகமாக வரி கட்ட வேண்டும். இது சிறிய மற்றும் பெரிய கிரிப்டோ வர்த்தகர்களுக்கு மிக பெரிய நஷ்டமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் கிரிப்டோவிற்கு வரி அதிகம் என நான் நினைக்கிறேன்.
மேலும் ஒவ்வொரு டிரேடும் முடிக்கும் போது ஒரு சதவீதம் TDS கட்ட வேண்டும். இது 5% வரை வசூலிக்கப்படுகிறது என பலர் கூறியுள்ளனர். இது ஒரு மிகவும் வருத்தமான விஷயம் ஆகும். எனவே இப்போது பெரும்பாலான மக்கள் இண்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச்களை நாடுகின்றனர் மற்றும் மற்றும் கிரிப்டோவில் வர்த்தகம் செய்வதையும் நிறுத்திவிட்டனர். மேலும் இந்தியன் எக்ஸ்சேஞ்ச்களில் டிரேடிங் வாலிம் 80%ஐயும் விட அதிகமாக குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
-
கிரிப்டோ வர்த்தகம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ஆனால் எந்த சட்ட வரைமுறையும் வகுக்கப்படவில்லை. முப்பது சதவீதம் வரி மற்றும் TDS போன்றவற்றால் இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகம் நலிவடைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் என்பது சதவீதத்தையும் விட அதிகமாக டிரேடிங் வாலிம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.